தமிழ்நாடு
நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் விவசாயிகளுக்கான முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதன்படி சன்னரக நெல்லுக்கு ரூ.289-ம், பொதுரக நெல்லுக்கு ரூ.159-ம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். மேலும், கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசின் சார்பில் டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் கரும்பு ஒரு டன்னுக்கு மொத்தம் ரூ.4,000 விலை கிடைக்கப் பெறும் என சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
In brief (English)
The Tamil Nadu government announced an increase in state incentives for paddy and sugarcane crops under Rule 110 in the Assembly, taking total sugarcane prices to Rs 4,000 per ton.