புதுச்சேரி

அரவிந்தரின் பிறந்தநாளையொட்டி ஆரோவில்லில் சிறப்பு ஓவியக் கண்காட்சி

புதுச்சேரி:

ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளையொட்டி ஆரோவில்லில் உள்ள கலாச்சார மையத்தில் சிறப்பு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில் பல்வேறு கலைஞர்களின் தனித்துவமான மற்றும் கண்கவர் ஓவியப் படைப்புகள் பொதுமக்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஆன்மீகம் மற்றும் அரவிந்தரின் தத்துவங்களை வெளிப்படுத்தும் வகையிலான படைப்புகள் இதில் இடம்பெற்றன.

ஆரோவில் வாசிகள், கலை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இக்கண்காட்சியைப் பார்வையிட்டு ஓவியங்களை வியந்து பாராட்டினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன