புதுச்சேரி
உருளையன்பேட்டையில் விதவை தாய்மார்களின் மகள்களுக்கு திருமண உதவித்தொகை
புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் விதவை தாய்மார்களின் மகள்களுக்கு திருமண நிதியுதவியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு தலா ரூ. 1 லட்சத்திற்கான காசோலைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நேயம் மக்கள் கழக தலைவருமான நேரு நேரில் வழங்கினார். இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் நலத்துறை தொகுதி ஆய்வாளர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் கலந்து கொண்டனர்.
In brief (English)
Orleanpet MLA G. Nehru handed over Rs 1 lakh marriage assistance cheques provided by the Adi Dravidar Welfare Department to eligible beneficiaries.
