புதுச்சேரி

37 ஆண்டுகள் பணி நிறைவு: குடிநீர்ப் பிரிவு பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஓய்வு

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையின் பொது சுகாதாரக் கோட்டத்தில், விடுதலை நகர் குடிநீர்ப் பிரிவு அலுவலகத்தில் 37 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த இளநிலைப் பொறியாளர் பி. கோபாலகிருஷ்ணன் இன்று பணி ஓய்வு பெற்றார்.

பணிக்காலம் முழுவதும் குடிநீர் வசதியை மேம்படுத்தும் பல திட்டங்களில் அவர் ஈடுபட்டு வந்தார்.

விடுதலை நகர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அரியாங்குப்பம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா. பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி, கோபாலகிருஷ்ணனுக்குப் பொன்னாடை போர்த்தி அன்பளிப்பு வழங்கி அவரது நீண்டகாலச் சேவையைப் பாராட்டினார்.

“உங்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகள்தான் துறையின் முதுகெலும்பு; மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து வழிகாட்ட வேண்டும்” என்று அவர் கூறினார். கோபாலகிருஷ்ணனுக்கு ஆரோக்கியமான ஓய்வு வாழ்க்கை அமைய வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *