தமிழ்நாடு

சஷ்டியை முன்னிட்டு மயிலம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சஷ்டியை முன்னிட்டு இன்று பக்தர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆவணி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையும், சஷ்டி திதியும் ஒரே நாளில் அமைந்ததால் மயிலம் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை பக்தர்கள் வழிபட்டனர். இன்று மாலை 5.35 மணி வரை சஷ்டி திதி உள்ளது.

பால் காவடி, பூ காவடி எடுத்து வந்த பக்தர்களும், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியவர்களும் கோவிலுக்கு வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், வரிசை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன