புதுச்சேரி

மீனவர்களுக்கு நியமன எம்.எல்.ஏ. பதவி வழங்கக் கோரிக்கை: புதுச்சேரியில் தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்றத்தில் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நியமன எம்.எல்.ஏ. பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப்பின் நிறுவனர் மங்கையர்செல்வன் தலைமை தாங்கினார். இதில் மீனவர் நல அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கவும், அவர்களின் உரிமைகளை சட்டமன்றத்தில் உரக்கப் பேசவும் உரிய பிரதிநிதித்துவம் அவசியமாகும். எனவே, அரசு நியமன எம்.எல்.ஏ. பதவிகளில் ஒன்றை மீனவர் சமூகத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன