புதுச்சேரி

பிள்ளையார்குப்பம் சமுதாய நலக்கூடத்தில் தீவிர தூய்மைப்பணி: எம்எல்ஏ மோகன்தாஸ் அறிவுறுத்தலின்பேரில் நடவடிக்கை!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள சமுதாய நலக்கூட வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தொகுதி மக்களின் பொதுப்பயன்பாடு மற்றும் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு இப்பணிகள் துவங்கப்பட்டு முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பிள்ளையார்குப்பம் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூட வளாகத்தில் முட்புதர்கள் மண்டிக்கிடப்பதாகவும், சுற்றுப்புறப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தி சுகாதாரமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் E. மோகன்தாஸ் அவர்களிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் அத்தியாவசிய கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த சட்டமன்ற உறுப்பினர், சம்பந்தப்பட்ட பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

அதன்படி, சட்டமன்ற உறுப்பினர் E. மோகன்தாஸ் அவர்களின் நேரடி அறிவுறுத்தலின்பேரில், சமுதாய நலக்கூட வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளாகத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த புதர்கள், தேவையற்ற கழிவுகள் மற்றும் குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டு, அப்பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் சுபநிகழ்ச்சிகள் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்தும் முக்கிய இடமான சமுதாய நலக்கூடம் சுகாதாரமாக மாற்றப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களின் கோரிக்கைக்கு உடனடி தீர்வு கண்டு தூய்மைப்பணிகளை முன்னெடுத்த ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் E. மோகன்தாஸ் அவர்களுக்கு பிள்ளையார்குப்பம் கிராம பொதுமக்கள் தங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன