புதுச்சேரி
புதுச்சேரியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.7 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு!
புதுச்சேரியைச் சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் ரவிசங்கர் என்பவரிடம், கடையை விற்பதாகக் கூறி ஜெகதீசன் என்பவர் போலி ஆவணங்களை காட்டியுள்ளார். அதனை உண்மை என நம்பி ரவிசங்கர் ரூ.7 லட்சத்தைக் கொடுத்த நிலையில், அந்த கடை வேறு ஒருவருக்குச் சொந்தமானது என்பதும் தான் ஏமாற்றப்பட்டதும் அவருக்குத் தெரியவந்தது.
இதுகுறித்து தட்டிக்கேட்ட ரவிசங்கருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவர் புதுச்சேரி நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்ற உத்தரவின்படி, போலி ஆவணங்கள் மூலம் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீசன் மற்றும் அவரது மனைவி மீது கோரிமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


