காரைக்கால்: எம்எல்ஏ டாக்டர் விக்னேஸ்வரன் பிறந்தநாளையொட்டி திருவட்டக்குடியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மக்கள் மருத்துவர் டாக்டர் V. விக்னேஸ்வரன் MBBS அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தொகுதிக்குட்பட்ட திருவட்டக்குடி பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் V. விக்னேஸ்வரன் வருகின்ற அக்டோபர் 12-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, பொதுமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் திருவட்டக்குடி காலனி தெருவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் V. விக்னேஸ்வரன் நேரில் கலந்துகொண்டு, அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் இனிப்புகளையும் வழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு முன்கூட்டியே தங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
“பொதுமக்களின் நலனே முதன்மை; என்றும் மக்கள் பணியில் முனைப்புடன் செயல்படுவதே இலக்கு” என்ற நோக்கில் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி முழுவதும் பொதுமக்களுக்குத் தேவையான நலப்பணிகளை முன்னெடுப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் திருவட்டக்குடி பகுதியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



