தமிழ்நாடு

மாணவர் போராட்டங்களுக்குத் தடை: சுற்றறிக்கையை திரும்பப் பெற்றதற்கு கனிமொழி கடும் கண்டனம்

சென்னை: மாணவர்கள் ஜனநாயக ரீதியில் போராடுவதற்குத் தடை விதிக்கும் வகையில் கல்லூரிக் கல்வி ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கையை, கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதேபோல், குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சர்ச்சைக்குரிய அறிக்கையும் வெளியாகி, பின்வாங்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அரசின் உத்தரவின்றி அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்களா அல்லது முதலில் பாசிச அரசியலைத் தொடங்க முயற்சித்துவிட்டு, எதிர்ப்பு வரும்போது அதிகாரிகள் மீது பழியைப் போட்டு அரசு பின்வாங்குகிறதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயக உரிமைகளைப் பறிக்க முயற்சிப்பதும், எதிர்ப்பு எழுந்ததும் பின்வாங்குவதும் தற்போதைய ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன