உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை!

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரரும் தேசியத் தலைவருமான ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மூத்த தலைவர் பி.கே. மூக்கையா தேவர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு பாஜக மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்வின்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தேசப்பற்று, தியாகம், வீர உணர்வு மற்றும் சமுதாய மறுமலர்ச்சிக்கான மகத்தான பணிகளை நினைவுகூர்ந்து பெருமிதம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதி மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரான பி.கே. மூக்கையா தேவரின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. கதலி நரசிங்கப் பெருமாள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்து மரியாதை செலுத்தினர்.


