புதுச்சேரி
முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள்: உப்பளத்தில் சுற்றுலா படகுத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி
புதுச்சேரி முதல்வர் ந. ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, உப்பளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எக்ஸ்போ மைதானத்தில் சுற்றுலா படகு உரிமையாளர்களுக்கு அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநிலச் செயலாளர் பாப்புசாமி, மாநிலக் கழகத் துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சுற்றுலா படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முனியன், செயலாளர் மதன், பொருளாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.
மேலும் நிர்வாகிகள் மதிவாணன், ராஜ்குமார், பிரசாந்த், அரவிந்த், தேவா, புதுவேந்தன், மதி, தமிழ், சதீஷ், ராஜேஷ், சங்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

