காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் வெள்ளி வென்ற தமிழக வீரர் ராஜா முத்துபாண்டிக்கு ரூ.30 லட்சம் பரிசு
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் பிரிவில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா முத்துபாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சுமை தூக்கும் கூலித் தொழிலாளியின் மகனான இவர் வறுமையை வென்று இச்சாதனையை எட்டியுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் சாதனை படைத்த வீரர் ராஜா முத்துபாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
Tamil Nadu weightlifter Raja Muthupandy won a silver medal in the men’s 65kg category at the Commonwealth Games in Glasgow. Hailing from a humble background in Kovilpatti, his achievement has drawn praise across the country. President Droupadi Murmu and Prime Minister Narendra Modi extended their congratulations to the athlete. Tamil Nadu Chief Minister Vijay announced a cash incentive of Rs 30 lakh to honor his outstanding performance on the international stage.

