புதுச்சேரி

மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பர்பிள் டாட்ஸ்’ திட்டம்: புதுச்சேரி ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பர்பிள் டாட்ஸ்’ திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திட்டத்தை வடிவமைத்த நிறுவனத்தின் பிரதிநிதிகள், அதன் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை விளக்கினர். மாற்றுத்திறனாளிகளின் தேவைகளைக் கண்டறிந்து, அரசு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள், மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகள், கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பெற சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் சேவை நிறுவனங்களுடன் இணைப்பு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. உதவிகளைப் பெறுவதில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சிரமங்களைக் குறைத்து, சேவைகள் உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் திட்டத்தின் இணையதளத்தின் செயல்பாடுகளும் விளக்கப்பட்டன. கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன