புதுச்சேரி

காமராஜ் நகர் சித்தான்குடியில் கழிவுநீர் வடிகால் பிரச்னை: எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் உடனடி நடவடிக்கையால் தீர்வு!

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட சித்தான்குடி பகுதியில் நிலவி வந்த கழிவுநீர் வடிகால் பிரச்னைக்கு, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்டின் எடுத்த துரித நடவடிக்கையால் உடனடித் தீர்வு காணப்பட்டுள்ளது.

காமராஜ் நகர் தொகுதி, சித்தான்குடி முருகன் கோயில் தெருவில் உள்ள கழிவுநீர் வடிகாலில் திடீரென அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சீராகச் செல்லாமல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் அப்பகுதி வழியே செல்லும் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த விவகாரம் குறித்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று புகார் அளித்தனர். பொதுமக்களின் புகாரை உடனடியாகக் கேட்டறிந்த அவர், உரிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு வடிகால் அடைப்பை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து தூய்மைப் பணியாளர்கள் மற்றும் துறைசார்ந்த ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கழிவுநீர் வடிகால் பாதையில் இருந்த அடைப்புகளை முழுமையாக அகற்றிச் சீரமைத்தனர். வடிகால் சீரமைக்கப்பட்டு கழிவுநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டதால், அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டதோடு, துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன