தமிழ்நாடு

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதா வரைவு: சட்டத்துறை அமைச்சரிடம் தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு நேரில் சமர்ப்பிப்பு!

சென்னை:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி ‘வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதா வரைவு’ சட்டத்துறை அமைச்சரிடம் முறைப்படி சமர்ப்பிக்கப்பட்டது.

வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் கௌரவத் தலைவர் எஸ். பிரபாகரன் தலைமையில் நேரில் சென்ற கூட்டமைப்பின் முக்கியப் பிரதிநிதிகள் குழுவினர், சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரைச் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின்போது, நீதிமன்றப் பணிகளில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், பாதுகாப்பின்மை உள்ளிட்ட பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

வழக்கறிஞர்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் தங்களது சட்டப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ பாதுகாப்புகள், குற்றவியல் அச்சுறுத்தல்களிலிருந்து சட்டப் பாதுகாப்பு வழங்கும் வழிமுறைகள் மற்றும் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான விரிவான பரிந்துரைகள் அடங்கிய வரைவு மசோதா (Draft Tamil Nadu Advocates Protection Bill) அமைச்சரிடம் வழங்கப்பட்டது.

நீதித்துறையின் முக்கியத் தூண்களாகத் திகழும் வழக்கறிஞர்களின் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், இந்த வரைவு மசோதாவில் உள்ள அம்சங்களைப் பரிசீலித்து, உரிய சட்டமியற்றத் தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கைகளை கவனத்துடன் கேட்டறிந்த சட்டத்துறை அமைச்சர், இதுதொடர்பாக உரிய பரிசீலனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன