விளையாட்டு

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளி மல்லர்கம்ப வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்: மாவட்ட ஆட்சியர் நேரில் வழங்கி வாழ்த்து!

விழுப்புரம்:
விழுப்புரம் நகராட்சி பூங்காவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், ‘கைகொடுக்கும் கை’ அமைப்பைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மல்லர்கம்ப வீரர்களுக்குத் தேவையான மல்லர்கம்ப விளையாட்டு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் திரு. S. ஷேக் அப்துல் ரஹமான், IAS நேரில் வழங்கினார்.

பாரம்பரிய தற்காப்புக் கலையான மல்லர்கம்ப விளையாட்டில் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், முறையான பயிற்சிகள் மூலம் அடுத்த கட்ட நிலைக்கு முன்னேற உதவும் வகையிலும் இவ்வுபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வின்போது விளையாட்டு உபகரணங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர், வீரர்களின் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் பாராட்டி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து பயிற்சி பெற்று தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான அனைத்து ஆதரவும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (SDAT) அலுவலர் திரு. ஆழிவாசன், தமிழ்நாடு மல்லர்கம்ப கழக செயல் தலைவர் முனைவர் துரை செந்தில்குமார், செயலாளர் முனைவர் M. ஜனார்த்தனன், மாவட்ட மல்லர்கம்ப பயிற்சியாளர் திரு. மல்லன் ஆதித்தன் உள்ளிட்ட விளையாட்டுத்துறை அலுவலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன