புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதிக்கு விளம்பரம் இல்லாமல் முதல்வர் ரங்கசாமி செய்த நலத்திட்டங்கள் ஏராளம்: வேட்பாளர் அசோக் ஆனந்த் வாக்கு சேகரிப்பு

புதுச்சேரி, செப். 27:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட திலகர் நகர், மோகன் நகர், குண்டுபாளையம் ஆகிய பகுதிகளில் என்.டி.ஏ. கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ‘ஜக்’ சின்னத்திற்கு ஆதரவு கோரி வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின்போது வாக்காளர்களிடையே பேசிய அசோக் ஆனந்த், “தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்கு நான் ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் கடமைகள் இன்னும் ஏராளமாக உள்ளன. என்னை நம்பி இந்த தொகுதியில் எண்ணற்ற குடும்பங்களும் இளைஞர்களும் உள்ளனர். கடந்த காலத்தில் ஏற்பட்ட சில அரசியல் சூழல்களால் தொகுதிப் பணிகள் தடைபட்டன. இருப்பினும், கடந்த 5 ஆண்டுகளாக முதல்வர் ரங்கசாமியிடம் தொகுதியின் முக்கியத் தேவைகளைத் தொடர்ந்து கொண்டு சென்று பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியைப் புறக்கணித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது முற்றிலும் தவறானது. விளம்பரம் எதுவுமின்றி மக்கள் நலனுக்காக முதல்வர் ஆற்றிய பணிகள் ஏராளம். இத்தேர்தலில் நான் வெற்றி பெற்றால், இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தவும் நல்வழிப்படுத்தவும், பெண்களின் உடல்நலம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் சிறப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என உறுதியளித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன