சிறப்பாகப் பணியாற்றிய 62 காவலர்களுக்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் வெகுமதி வழங்கி பாராட்டு
சென்னை, செப். 26:
தென்மண்டலம் மற்றும் மதுரை மாநகரில் சிறப்பாகவும், பாராட்டத்தக்க வகையிலும் பணியாற்றிய 62 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால் IPS அவர்கள் பாராட்டு தெரிவித்து வெகுமதிகளை வழங்கினார்.
பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு சிறந்த முறையில் பணியாற்றிய தென்மண்டல காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் மதுரை மாநகர காவல்துறையினரின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
சிறப்பான களப்பணிகளை மேற்கொண்ட 62 காவல்துறையினருக்கு வெகுமதிகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய டிஜிபி, தொடர்ந்து பொதுமக்கள் நலன் காக்கும் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும் என வாழ்த்தி ஊக்கப்படுத்தினார். இந்த பாராட்டு களத்தில் பணியாற்றும் காவல்துறையினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


