புதுச்சேரி

உப்பளம் வம்பாகீரப்பாளையத்தில் ரூ.16 கோடியில் புதிய மீன்பிடி ஜெட்டி: எம்.எல்.ஏ அன்பழகன் நேரில் ஆய்வு!

புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட பாண்டி மெரினா பின்புறம் வம்பாகீரப்பாளையம் பகுதியில், மீனவ மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புதிய மீன்பிடி ஜெட்டி அமைக்கும் பணிகளுக்கான இடத்தை தற்காலிக சபாநாயகரும், அஇஅதிமுக மாநில செயலாளருமான ஏ.அன்பழகன் எம்.எல்.ஏ நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இப்பகுதியில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், தனியான மீன்பிடி தளம் இல்லாத காரணத்தால் மீனவர்கள் நீண்ட தூரம் சென்று படகுகளை இறக்கவும், மீன்பிடி உபகரணங்களை ஏற்றவும் கடும் சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், முதலமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரின் கவனத்திற்கு இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு, சுமார் ரூ.16 கோடி மதிப்பீட்டில் 200 மீட்டர் நீளமுள்ள புதிய ஜெட்டி அமைக்க அரசு அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து திட்டப் பணிகளைத் தொடங்குவதற்கான கள ஆய்வில் மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில், திட்ட இயக்குநர் ராஜேந்திரன், தாசில்தார் சிலம்பரசன், அரசு அதிகாரிகள், வம்பாகீரப்பாளையம் பஞ்சாயத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த புதிய ஜெட்டி கட்டுமானத்தால் மீனவர்களின் சிரமங்கள் நீங்கி, வாழ்வாதாரம் சிறக்கும் என அன்பழகன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன