நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30 வரை வங்கிகள் வேலைநிறுத்தம்: சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்!
புதுச்சேரி, செப். 24:
நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு, 5 நாள் வேலை வாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர் வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கி கிளைகளின் நேரடிச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் பொதுமக்களும், வணிகர்களும் தங்களது அத்தியாவசிய வங்கி பணப் பரிவர்த்தனைகள், காசோலை கிளியரன்ஸ் உள்ளிட்ட நேரடி சேவைகளை முன்னதாகவே முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதே வேளையில், விடுமுறை மற்றும் வேலைநிறுத்த நாட்களில் பணத் தேவைகளுக்காக ஏ.டி.எம். மையங்கள், இணைய வங்கி (Net Banking) மற்றும் மொபைல் பேங்கிங் உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


