புதுச்சேரி

காமராஜ் நகர் ரெயின்போ நகரில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்!

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட ரெயின்போ நகர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுமுக விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, ரெயின்போ நகர் 8-வது குறுக்குத் தெருவில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், பூமி பூஜை செய்து பணிகளை முறைப்படி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட உள்ளது.

இந்நிகழ்வில் செயல் பொதுச்செயலாளர் ராம்குமார், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பிரபாகரன், ரெயின்போ நகர் வார்டு தலைவர் என்.ஆர். சுரேஷ் மற்றும் பூத் தலைவர் சுதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் திரளாகப் பங்கேற்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன