காரைக்கால்

காரைக்காலில் பனை விதை நடும் பணி: உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்!

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி மேடு குளம் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைப் பாதுகாப்பை முன்னிறுத்தி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பனை விதைகளை நட்டு திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.

நெடுங்காடு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில், நிரவி – திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். நீர்நிலைகளின் கரைகளைப் பலப்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கவும் உதவும் பனை மரங்களை அதிகளவில் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து இந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து குளத்தின் கரையோரப் பகுதிகளில் பனை விதைகள் நடப்பட்டன. மண் அரிப்பைத் தடுத்து இயற்கை சமநிலையைப் பேண உதவும் இதுபோன்ற பணிகளில் இளைஞர்களும் பொதுமக்களும் அதிகளவில் பங்கெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன