மாஹே
மாஹே அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய ஆயுர்வேத தினக் கருத்தரங்கு உற்சாகம்!

மாஹே: தேசிய ஆயுர்வேத தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மாஹே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆயுர்வேத விழிப்புணர்வு கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது.
மத்திய ஆயுஷ் (AYUSH) அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், நமது பாரம்பர்ய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தின் பெருமைகள், மருத்துவக் குணங்கள் மற்றும் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கியமான இயற்கை வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்தியாவின் தொன்மையான மருத்துவ முறைகளை இளம் தலைமுறையினரான பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இக்கருத்தரங்கம் அமைந்தது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் துறை சார்ந்த பிரதிநிதிகள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.