காரைக்கால் என்.ஐ.டி-யில் ‘மை பாரத்’ போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால்: தேசிய அளவிலான ‘மை பாரத்’ (MY Bharat) முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT Puducherry) போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
“வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்” என்ற பிரதான கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பக் கழகப் பணியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இன்றைய இளைய சமுதாயத்தினரிடையே போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகள், சமூகச் சீர்கேடுகள் குறித்து விரிவான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும், வலிமையான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க ஆரோக்கியமான, போதையற்ற இளைஞர் சக்தியே அடித்தளம் என்பது இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.



