தமிழ்நாடு

சென்னையில் 17-வது கதகளி திருவிழா தொடக்கம்: கலாசேத்ரா அறக்கட்டளையில் அரங்கேறும் கலை விருந்து!

சென்னை, செப். 19:
சென்னையில் உள்ள புகழ்பெற்ற கலாசேத்ரா அறக்கட்டளையில் 17-வது கதகளி திருவிழா மிகச் சிறப்பாகத் தொடங்கியது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவுடன் நடைபெறும் இந்த பாரம்பரிய நாட்டிய திருவிழாவானது, செப்டம்பர் 18 முதல் 20-ஆம் தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த ஆண்டின் கதகளி திருவிழா ‘கதா ரஸ சங்கமம்’ (கதைகளின் சாராம்ச சங்கமம்) என்ற சிறப்பு கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இதில் கதகளி கலையின் முன்னணி நிறுவனங்களான சதனம் அகாடமி, கேரள கலாமண்டலம் மற்றும் மார்கி தியேட்டர் ஆகிய மூன்று முக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து தங்களது தனித்துவமான மூன்று படைப்புகளை மேடையேற்றுகின்றன.

திருவிழாவின் ஒரு பகுதியாக, மூன்று நாட்களும் காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை ருக்மணி அரங்கத்தில் சிறப்பு விரிவுரை மற்றும் செயல்முறை விளக்கக் காட்சிகள் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து கலாசேத்ரா அறக்கட்டளை மாணவ, மாணவிகளின் கதகளி நடன அரங்கேற்றங்களும் இடம்பெறுகின்றன. பாரம்பரிய கலை ஆர்வலர்கள் பலரும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன