தமிழ்நாடு

தி.மு.க. முப்பெரும் விழா வரும் செப். 19-ஆம் தேதி நடைபெறும்: தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை, 17/9/2026: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘முப்பெரும் விழா’ வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னதாக செப்டம்பர் 15, 2026 அன்று நடைபெறவிருந்த தி.மு.க. முப்பெரும் விழா தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, அதற்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாற்றியமைக்கப்பட்ட புதிய தேதியின்படி தி.மு.க. முப்பெரும் விழா வரும் 19.09.2026 (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

கழக முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்குதல், சிறப்புரைகள் மற்றும் முக்கிய கழக நிகழ்வுகளுடன் நடைபெறவுள்ள இவ்விழாவில் கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன