நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதியில் எம்எல்ஏ டாக்டர் விக்னேஸ்வரன் கள ஆய்வு: அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்ற உத்தரவு!

காரைக்கால்: நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் தெருக்களில் நிலவி வரும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில், அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று அதிரடி கள ஆய்வு மேற்கொண்டார்.
நெடுங்காடு மற்றும் கோட்டுச்சேரி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது ஊர்களில் உள்ள சாலை வசதிகள், தெருக்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் குறித்த பல்வேறு குறைகளை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரனிடம் நேரில் தெரிவித்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணும் வகையில், அவர் நெடுங்காடு பஞ்சாயத்து ஆணையர் மற்றும் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆகியோரை நேரில் அழைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார்.
பொதுமக்களின் அன்றாடத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சாலை மற்றும் தெருக்களில் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பான அனைத்துக் குறைகளையும் எந்தவித தாமதமுமின்றி விரைந்து சீரமைத்துத் தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து ஆணையர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.
