புதுச்சேரி

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் குரூப் ஏ & பி பணியிடங்கள்: அயல்பணி அடிப்படையில் விண்ணப்பிக்க அழைப்பு!

புதுச்சேரி தன்வந்தரி நகரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ நிறுவனமான ஜிப்மர் (JIPMER) மற்றும் காரைக்கால் ஜிப்மர் கிளையில் காலியாக உள்ள பல்வேறு குரூப் ஏ மற்றும் குரூப் பி பணியிடங்களை அயல்பணி (Deputation basis) அடிப்படையில் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜிப்மர் புதுச்சேரி வளாகத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி (Controller of Examinations – 1), பதிவாளர் (Registrar – 1), சிஸ்டம் அனலிஸ்ட் (2), கம்ப்யூட்டர் புரோகிராமர் (2), பர்சேஸ் அதிகாரி (1), டேட்டா பிராசசிங் அசிஸ்டன்ட் கிரேடு ஏ (1), உதவிப் பதிவாளர் (1) உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஊதிய அளவீடு 7-வது ஊதியக் குழுவின்படி லெவல் 7 முதல் லெவல் 12 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், காரைக்கால் ஜிப்மர் வளாகத்தில் பதிவாளர் (1), உதவித் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி (1), கம்ப்யூட்டர் புரோகிராமர் (1), கணக்கு அதிகாரி (Accounts Officer – 1) மற்றும் உதவிப் பதிவாளர் (2) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய, மாநில அரசுத் துறைகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், தன்னாட்சி அமைப்புகள், அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றி வரும் தகுதியான அலுவலர்கள் இப்பணியிடங்களுக்கு அயல்பணி அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன