புதுச்சேரி

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் பானை மீது 20 நிமிடம் பரதநாட்டியம்: 131 மாணவிகள் உலக சாதனை!

புதுச்சேரி, செப். 07:
புதுச்சேரி வில்லியனூரில் உள்ள புகழ்பெற்ற திருக்காமீஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ (Indian Book of Records) உலக சாதனைக்கான பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ‘நாட்டிய சாஸ்ராலியா’ பரதநாட்டியப் பள்ளியைச் சேர்ந்த 131 மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் மண்பானைகள் மீது நின்றவாறு உடலை சமநிலைப்படுத்தி, தொடர்ந்து 20 நிமிடங்கள் அசைவற்று நளினத்துடன் பரதநாட்டியம் ஆடி வியக்கத்தக்க உலக சாதனையைப் படைத்தனர்.

மாணவிகளின் இந்த அரிய சாதனையைப் பாராட்டி, ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ உலக சாதனைச் சான்றிதழை பிரபல திரைப்பட நடன இயக்குநரான கலா மாஸ்டர் மாணவிகளுக்கு வழங்கி வாழ்த்தினார். இந்த சாதனையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் நாட்டிய ஆர்வலர்கள் மாணவிகளுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன