தமிழ்நாடு

சென்னையில் ஒலிம்பிக் நகரம், புதிய தலைமைச் செயலகம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!

சென்னை, செப். 3: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-இன் கீழ் விளையாட்டு மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான மிக முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். சர்வதேச தரத்திலான வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னையில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகன சாகச மற்றும் பந்தய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் சேர்த்து, அரசு நிர்வாகப் பணிகளை மேம்படுத்தும் வகையில், சென்னையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Image Credits: CMOT

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன