அரசியல்

மேட்டூர் அணை நீர் திறப்பு: தமிழக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் சரமாரி கேள்வி!

சென்னை: மேட்டூர் அணை 45 நாட்கள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளதால் குறுவை சாகுபடி வாய்ப்பு பறிபோய்விட்டது என்றும், சம்பா சாகுபடிக்குத் தேவையான காவிரி நீரைப் பெற்றுத்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வழக்கமாக ஜூன் 12-ல் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை தற்போது தாமதமாகவே திறக்கப்பட்டுள்ளது. 120 முதல் 130 நாட்கள் தண்ணீர் தேவைப்படும் சம்பா பயிருக்கு குறைந்தது 100 நாட்களாவது நீர் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. ஆனால் தற்போது 45 நாட்களுக்கு மட்டுமே நீர் திறக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் அணை நீர்மட்டம் 90 அடியாக உள்ள நிலையில், கடைமடை வரை தண்ணீர் சென்றடைய கூடுதல் நாட்களாகும் என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

டெல்டா சாகுபடிக்கு 280 நாட்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும் நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தும் தமிழக அரசு உரிய காவிரி நீரைப் பெற்றுத்தர தீவிர முயற்சி எடுக்கவில்லை. மழையினால் அணைகள் நிரம்பி வழியும் உபரி நீரைத் திறப்பது விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வாகாது என்றும், உரிய நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதே உண்மையான நீதி என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன