காரைக்கால்

அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள்: காரைக்கால் பூவம் மாரியம்மன் கோவிலில் பிரம்மாண்ட அன்னதானம்!

காரைக்கால்: புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயத்தின் பிறந்தநாளையொட்டி, காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட பூவம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தார். நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மக்கள் மருத்துவர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நிரவி – திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினர்களும் அன்னதானத்தை வழங்கினர். இந்நிகழ்வில் என்.டி.ஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள், தொண்டர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு அமைச்சர் நமச்சிவாயத்திற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன