தமிழ்நாடு

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கக் கோரி அதிமுக சார்பில் ஒத்தமாந்துறையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தாராபுரம், செப். 02:

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தினமும் 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடக் கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க திருப்பூர் புறநகர் கிழக்கு மற்றும் கரூர் மாவட்டக் கழகங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம் மற்றும் கரூர் மாவட்ட எல்லையான ஒத்தமாந்துறையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இரு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான அதிமுக நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது, விவசாயப் பாசனத்திற்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும் தட்டுப்பாடின்றி உதவும் வகையில், அமராவதி அணையிலிருந்து உடனடியாகத் தினசரி 3,000 கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி கண்டனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், பயிர்கள் கருகாமல் காப்பாற்றவும் தமிழக அரசு காலதாமதமின்றி போர்க்கால அடிப்படையில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இப்போராட்டம் அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன