புதுச்சேரி

உழவர்கரை தொகுதியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதியுதவி: ரூ.3 லட்சம் உதவித்தொகை ஆணைகளை வழங்கினார் எம்எல்ஏ டாக்டர் K. நாராயணசாமி!

புதுச்சேரி: புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், 20 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பிலான நிதியுதவி ஆணைகள் வழங்கப்பட்டன. உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் K. நாராயணசாமி இந்த ஆணைகளை பயனாளிகளுக்கு நேரில் வழங்கி சிறப்பித்தார்.

புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நலன்களைப் பேண பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உழவர்கரை தொகுதியைச் சேர்ந்த 20 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 12 பயனாளிகளுக்கு தலா ரூ.13,000 வீதமும், 8 பயனாளிகளுக்கு தலா ரூ.18,000 வீதமும் என மொத்தம் ரூ.3,00,000 மதிப்பிலான உதவித்தொகை ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் K. நாராயணசாமி, தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காகவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும், அரசு வழங்கும் இந்த நிதியுதவியை தாய்மார்கள் தங்களின் ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகளின் நலனுக்காக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன