தமிழ்நாடு

சிதம்பரம் உட்கோட்ட புதிய ஏ.எஸ்.பி.யாக சத்திரிய கவின் ஐ.பி.எஸ். பொறுப்பேற்பு!

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்ட காவல் துறை உதவி காவல் கண்காணிப்பாளராக (ASP) சத்திரிய கவின் டி.ஜே. ஐ.பி.எஸ். முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

சிதம்பரம் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பது, குற்றச் சம்பவங்களைத் தடுப்பது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகிய பணிகளை முன்னெடுக்கும் வகையில் அவர் இப்பொறுப்பை ஏற்றுள்ளார். புதிய ஏ.எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றுக்கொண்ட சத்திரிய கவின் ஐ.பி.எஸ். அவர்களுக்குக் காவல் துறை அதிகாரிகள், ஆளினர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பொதுமக்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களின் பணிகளைத் துரிதப்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன