புதுச்சேரி

காரைக்கால், மாஹே, ஏனாம் நலன்களைப் பாதுகாத்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும்: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வலியுறுத்தல்

புதுச்சேரி: காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறப்பட வேண்டும் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் சட்டப்பேரவையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இதுதொடர்பாகப் பேசிய அவர், மத்திய அரசு எந்தவொரு புதிய திட்டமாக இருந்தாலும், அதனைப் பரிசோதனை மற்றும் முன்னோடி முறையில் புதுச்சேரியில்தான் முதலில் அறிமுகப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டினார். ஆனால், அதற்கேற்றவாறு அரசுக்கான முழுமையான அதிகாரங்களை வழங்காமல், மாநில அந்தஸ்தை புதுச்சேரிக்குத் தர மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், மத்திய நிதி ஆணையக் குழுவிலும் புதுச்சேரி சேர்க்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அனைத்துப் பிராந்திய மக்களின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து உரிமையை வென்றெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன