புதுச்சேரி

ஜிப்மரில் மக்கள் தொடர்பு அதிகாரி, பத்திரிகையாளர்களுக்கு சலுகைகள்: எம்.எல்.ஏ. நேரு முக்கிய கோரிக்கைகள்!

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருங்கிணைப்பாளர் நியமனம், பத்திரிகையாளர் நலன்கள் மற்றும் தெருநாய்கள் பாதுகாப்பு குறித்து உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.நேரு பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

புதுச்சேரி மக்களின் பல்வேறு அத்தியாவசிய தேவைகள் தொடர்பாக அவர் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அங்கு வரும் ஏழை, எளிய நோயாளிகளுக்கு உதவவும் வழிகாட்டவும் தனியாக ஒரு மக்கள் தொடர்பு அதிகாரி அல்லது ஒருங்கிணைப்பாளரை அரசு நியமிக்க வேண்டும் என எம்.எல்.ஏ. நேரு வலியுறுத்தியுள்ளார். மேலும், ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், அவர்களின் மாத ஓய்வூதியத் தொகையை கணிசமாக உயர்த்த வேண்டும் மற்றும் முழுமையான மருத்துவக் காப்பீடு வசதியை அரசு செய்து தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்ந்து உருளையன்பேட்டை பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து காப்பகம் அமைத்து பராமரித்தால், அதற்கான முழு பராமரிப்பு செலவையும் தனது சொந்த நிதியிலிருந்து ஏற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பொதுநலன் சார்ந்த அவரது இந்தக் கோரிக்கைகள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன