புதுச்சேரி

புதுவை கடற்கரையில் மகா சமுத்திர ஆரத்தி: பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய எம்எல்ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின்!

புதுச்சேரி: பௌர்ணமி திருநாளை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற மகா சமுத்திர ஆரத்தி நிகழ்வில் லோக் ஜனசக்தி கட்சியின் (LJK) தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான (MLA) ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்துகொண்டார்.

பௌர்ணமியை முன்னிட்டு புதுவை கடற்பகுதியில் கடல் அன்னைக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு, மகா சமுத்திர ஆரத்தி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான ஆன்மீகப் பெரியோர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டு கடல் அன்னைக்கு வழிபாடு நடத்தினர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற எம்எல்ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின், பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அதனைத் தொடர்ந்து, வழிபாட்டு நிகழ்விற்கு வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர் அன்னதான பிரசாதங்களை வழங்கி சிறப்பித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன