புதுச்சேரி

புதுச்சேரியில் ‘கேலோ இந்தியா சம்வாத்’ கருத்தரங்கு: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், எம்.பி. செல்வகணபதி பங்கேற்பு!

புதுச்சேரி: தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ‘மை பாரத் கேந்திரா’ மற்றும் புதுச்சேரி அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் இயக்குநரகம் ஆகியவை இணைந்து நடத்திய ‘கேலோ இந்தியா சம்வாத்’ (Khelo India Samvaad) விவாதம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுச்சேரியில் சிறப்பாக நடைபெற்றது.

புதுச்சேரி ஸ்ரீ பாலாஜி வித்யாபீட் நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், புதுச்சேரி மேதகு துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எஸ். செல்வகணபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை அதிகரிப்பது, ஆரோக்கியமான வாழ்வியல் முறையை ஊக்குவிப்பது மற்றும் தேசிய அளவில் புதுச்சேரி வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன