புதுச்சேரி

புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு: முதல்வர் ரங்கசாமிக்கு தமிழ்ச் சங்கம் நேரில் வாழ்த்து!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்று பட்ஜெட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் என்.ரங்கசாமியை, புதுச்சேரி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது அவர் பேசுகையில், “தமிழ் இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழர் கலைகளை உலகறியச் செய்யும் உன்னத நோக்கில் புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், இந்திய விடுதலை நாள் விழா மற்றும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை அளித்துச் செயல்படுத்திய முதலமைச்சரின் நடவடிக்கை தமிழ் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் பாராட்டப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்ச் சங்கச் செயலாளர் சீனு.மோகன்தாஸ், துணைத் தலைவர் ப.திருநாவுக்கரசு, பொறியாளர் மு.பாலசுப்பிரமணியன், அக்ரி கணேஷ் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன