சினிமா

வாழ்வின் நல்ல தருணங்களை பாராட்ட வேண்டும் என்று பதிவிட்ட நடிகை காஜோல்

பாலிவுட் மூத்த நடிகை காஜோல், பழுப்பு நிற மேலாடையில் ஒரு மர அலங்காரப் பின்னணியில் எடுத்துக்கொண்ட புகைப்படத் தொகுப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்களுடன், “வாழ்வில் உள்ள நல்ல விஷயங்களின் அளவு, அவற்றை நாம் கவனிக்கும் திறனைப் பொருத்தே இருக்கிறது என்பதை சமீபத்தில் படித்தேன்.. இப்போது அதை என்னால் மறக்க முடியவில்லை” என்ற குறிப்பையும் காஜோல் இணைத்திருந்தார்.

‘திலவாலே துல்ஹனியா லேஜாயேங்கே’, ‘குச் குச் ஹோதா ஹே’, ‘பாஜிகர்’ போன்ற படங்கள் மூலம் பிரபலமான காஜோல், தேசிய விருது பெற்ற நடிகையும் ஆவார். ‘மா’ மற்றும் ‘சர்ஜமீன்’ ஆகிய படங்களில் சமீபத்தில் நடித்திருந்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன