தமிழ்நாடு

மின்சாரத்துறை அமைச்சர் பதிலளிக்கத் தயங்குகிறார்: சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

சென்னை, ஆக. 22: தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் அமைச்சர்கள் குதர்க்கமாகப் பேசுவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை அமைச்சரிடம் தான் முன்வைத்த கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். குறிப்பாக, 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போன விவகாரம் மற்றும் வெள்ளை அறிக்கையில் உள்ள முரண்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினால், அதற்கு பதிலளிக்காமல் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அமைச்சர்களின் நோக்கமாக உள்ளது என்றார். திமுக ஆட்சியில் மின்வாரியத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை வெள்ளை அறிக்கையிலேயே அரசு ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது அவை எதும் நடக்கவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க அமைச்சர்கள் முயற்சிப்பதாக அவர் விமர்சித்தார்.

மேலும், அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்த செந்தில் பாலாஜி, தவெக அரசு அமைந்த பிறகு பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்றார். எதிர்க்கட்சிகள் மீது வழக்குகளைப் பதிவு செய்வதிலேயே இந்த அரசு அதிக கவனம் செலுத்துவதாகவும், எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆளுங்கட்சியிடம் உண்மையான ஆதாரங்கள் இருந்தால், காலம் கடத்தாமல் அவற்றை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன