புதுச்சேரி

திருநல்லாறில் பாரம்பரிய சுகாதார பூங்கா: ஆளுநர் கைலாசநாதன் அடிக்கல் நாட்டினார்

காரைக்கால் திருநல்லாறு பகுதியில் தர்மபுர ஆதீனம் சார்பில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த பாரம்பரிய சுகாதார பூங்காவிற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் தர்மபுர ஆதீனத்தின் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட சான்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ஆளுநர், ஆன்மீகத்துடன் சமுதாயப் பணியை இணைத்து செயல்படும் தர்மபுர ஆதீனத்தின் பணிகளைப் பாராட்டினார். நவீன மருத்துவத்துடன் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் யோகா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்த பூங்கா எதிர்கால தலைமுறைக்கு மூலிகை ஆராய்ச்சியும் உடல் மற்றும் மனநலப் பயிற்சியும் அளிக்கும் மையமாகத் திகழும் என்றும் புதுச்சேரி அரசு இதற்கு முழு ஆதரவு அளிக்கும் என்றும் உறுதி கூறினார்.


Puducherry Lt. Governor Kailashnathan laid the foundation stone for an integrated traditional health park initiated by the Dharmapuram Adheenam in Tirunallar, Karaikal. Speaking at the event, the LG praised the Adheenam for its continuous social and spiritual services, including healthcare support during the COVID pandemic and educational initiatives. He highlighted the importance of Indian systems of medicine like Siddha, Ayurveda, and Yoga in combating lifestyle diseases. The proposed health park will feature medicinal plant gardens, research centers, lifestyle training, and meditation hubs. LG Kailashnathan assured that the Puducherry government will extend full support to such community welfare projects.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button