புதுச்சேரியில் மூளைவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவக் கட்டில் வழங்கிய எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட நடுத்தெரு புதுசாரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வம் என்பவர் மூளைவாத நோயால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் இருந்தார். இதுகுறித்து லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினிடம் குடும்பத்தினர் உதவி கோரினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவக் கட்டில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் துரைசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
In Puducherry’s Kamaraj Nagar constituency, Tamil Selvan from Pudusaram suffered from cerebral palsy and organ paralysis. His family approached Jose Charles Martin, MLA and leader of the Latchiya Jananayaga Katchi, seeking assistance. Responding swiftly to their request, the MLA arranged and provided a specialized medical bed for the patient. Party General Secretary Dr. Duraisamy and local party office-bearers were present during the handover, and the family expressed their gratitude to the MLA.