புதுச்சேரி

உருளையன்பேட்டை ஸ்ரீ தேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவ விழா துவக்கம்

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்த சாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவ விழா சிறப்பாகத் தொடங்கியது. விழாவின் முதல் நாளான இன்று முதற்கண் கடவுளான விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி நேயம் மக்கள் கழக தலைவருமான நேரு என்கின்ற குப்புசாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். மேலும் நேயம் மக்கள் கழக நிர்வாகிகள், கோயில் அறங்காவலர்கள் மற்றும் அப்பகுதி ஊர் பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


The annual Aadi month Bramhotsavam festival commenced at the Sri Devi Ashtalakshmi Mudakku Mariyamman Temple in Govinda Salai, located in the Orleanpet constituency of Puducherry. The festivities began with a special abhishekam, decoration, and street procession for Lord Vinayagar. Local MLA Nehru alias Kuppusamy, along with Neyam Makkal Kazhagam office bearers, attended the event to offer prayers. Temple administrators organized the opening day ceremonies with grand arrangements. A large number of local residents, women, and youth participated in the spiritual celebration.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button