புதுச்சேரி

புதுவை எக்ஸ் சர்வீஸ் லீக்கின் 20வது பொதுக்குழு கூட்டம் லாஸ்பேட்டையில் நடைபெற்றது

புதுவை எக்ஸ் சர்வீஸ் லீக்கின் 20வது பொதுக்குழு கூட்டம் லாஸ்பேட்டை அசோக் நகர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஜே.கே. பெருமாள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 750க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள், வீரநாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். பொருளாளர் மேனுவல் ராஜ் வரவு செலவு கணக்குகளைத் தாக்கல் செய்த நிலையில், பொதுச் செயலாளர் தேவராஜு ஓய்வூதிய ஆவணங்களைப் பராமரிப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், 80 வயதைக் கடந்த மூத்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் சாதனை படைத்த பிள்ளைகளுக்குப் பொன்னாடை போர்த்தி பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


The 20th General Body Meeting of the Puducherry Ex-Servicemen League was held at the Ashok Nagar Community Hall in Lawspet. Over 750 participants, including military veterans, Veera Naris, and their families, attended the annual conference. League President J.K. Perumal presided over the meeting and highlighted past achievements while outlining future initiatives. Financial statements for 2025–26 were presented by Treasurer Manuel Raj, and General Secretary Devaraju advised veterans on updating pension documents. Outstanding achievers, senior veterans over 80 years old, and meritorious students of veterans were honored with shawls and medals during the ceremony.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button