தமிழ்நாடு

முதலமைச்சர் விஜயை சந்தித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை, இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அதிகாரிகள் இன்று (14.08.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பில் ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் உமா சங்கர் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றனர். பொதுமேலாளர் இரா. முத்துச்செல்வன், துணைப் பொதுமேலாளர்கள் அ. சுதாகர், வே. சுரேஷ் குமார் மற்றும் உதவிப் பொதுமேலாளர் கு. ராஜ்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வங்கிச் சேவை விரிவாக்கம் மற்றும் பொதுமக்களுக்கு நிதிச் சேவைகள் எளிதில் கிடைப்பது தொடர்பாக சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன