புதுச்சேரி

புதுச்சேரியில் ஐஆர்பிஎன் உதவி ஆய்வாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு தொடக்கம்

புதுச்சேரி காவல்துறையின் ஐஆர்பிஎன் பிரிவில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 1,871 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான உடற்தகுதி மற்றும் திறன் தேர்வுகள் பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை தொடங்கின. முதல் நாளில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற நிலையில், வெள்ளிக்கிழமையும் தேர்வு தொடர்கிறது. தேர்வு வளாகத்தில் இளைஞர்களுக்கு மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுப் பணிகளை காவல்துறை துணைத் தலைவர் சத்தியசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார்.

In brief (English)

The physical efficiency test for recruitment of Sub-Inspectors in Puducherry Police’s IRBn wing kicked off, with over 200 candidates attending on day one.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன