புதுச்சேரி
முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 12, 13 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!
முதலியார்பேட்டை: முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட சுல்தானா நகரில் அமைந்துள்ள மேல்நிலை மற்றும் கீழ்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக, வரும் 12.08.2026 (புதன்கிழமை) மற்றும் 13.08.2026 (வியாழக்கிழமை) ஆகிய நாட்களில் மதியம் 12:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை பின்வரும் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் பகுதிகள்: சுல்தானா நகர், துளுக்காணத்தம்மன் நகர், நேதா நகர், திருமகள் நகர், மக்கள் நகர், நைனார்மண்டபம், மூகாம்பிகை நகர், வசந்த நகர், ஆதிபராசக்தி நகர், நேரு நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரை முன் கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
